fbpx
Others

கோடை விடுமுறைஅவசர வழக்குகளின் விசாரணை விவரம்..

, சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த காலத்தில் அவசர வழக்குகளின் விசாரணை குறித்தும், அதை விசாரிக்க உள்ள நீதிபதிகள் குறித்தும் ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் தனபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதன்படி, மே 2 மற்றும் 3-ந் தேதிகளில் (செவ்வாய் மற்றும்கோடைகால விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளின் விசாரணை குறித்து ஐகோர்ட்டு அறிவிப்பு புதன்கிழமைகளில்) தாக்கல் செய்யப்படும் அவசர வழக்குகள், 4 மற்றும் 5-ந் தேதிகளில் (வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்) விசாரிக்கப்பட உள்ளன மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அந்த வழக்குகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரிக்கப்படும்.  நீதிபதிகள் விடுமுறைகால சிறப்பு அமர்வில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜெ.சத்யநாராயண பிரசாத், ஜி.கே.இளந்திரையன், எஸ்.சவுந்தர், அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி, கே.ஜி.திலகவதி, சி.வி.கார்த்திகேயன், செந்தில்குமார் ராமமூர்த்தி, ஏ.ஏ.நக்கீரன், கே.குமரேஷ்பாபு, பி.புகழேந்தி, சத்திகுமார் சுகுமார குரூப், முகமது சபீக், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள். அதேபோல ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.விஜயகுமார், ஆர்.தாரணி, ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, ஆர்.கலைமதி, என்.மாலா, டி.வி.தமிழ்ச்செல்வி, எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா, பி.வடமலை ஆகியோர் வழக்குளை விசாரிப்பார்கள். ஓய்வு ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மே மாதம் 25-ந் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இந்த கோடைகால விடுமுறை காலத்தில் அவரும் அவசர வழக்குகளை விசாரிக்கிறார். ஐகோர்ட்டு மதுரை கிளையில் மே 17 மற்றும் 18-ந் தேதிகளிலும், சென்னை ஐகோர்ட்டில் மே 24 மற்றும் 25-ந் தேதிகளிலும் அவர் அவசர வழக்குகளை விசாரிக்கிறார்.

Related Articles

Back to top button
Close
Close