fbpx
Others

கொரோனாதொற்றுஅதிகரிப்பு மு.கஸ்டாலின் அறிவுறுத்தல்

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: மக்கள் விழிப்புடன் இருக்க மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்
ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்க்கண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.
  •  நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளனாவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல். (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
  • தமிழ்நாட்டில் தற்போது வரையில் முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 இலட்சம் நபர்கள் மற்றும் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அப்பகுதிகளில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட கூடிய ‘மெகா’ தடுப்பூசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் முதல் தவணை மற்றும்இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், முன்னெச்சரிக்கை தவணை செலுத்தி கொள்ளாதவர்கள் மீது கவனம் செலுத்தி ‘மெகா’ தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாவட்ட அளவில் முழுமையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கண்டறிந்து, அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள்  கவுரவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகள் 100% தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய ஊக்குவிக்க வேண்டும்.பொது சுகாதார வல்லுநர்கள் கூறிய வழிமுறைகளான கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிடோர் கலந்துகொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close