fbpx
Others

கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலை — ராமதாஸ் ?

கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது நியாயமல்ல - டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலை 76 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடந்த 9 நாட்களில் 8 தவணைகளில் பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ.5.29, டீசல் விலை ரூ.5.33 உயர்த்தப்பட்டிருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது நியாயமல்ல. இதனால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், இனியும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இத்தகைய நிலையைத் தவிர்க்க உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசுகுறைக்க வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்

Related Articles

Back to top button
Close
Close