fbpx
Others

ஈரோடு கிழக்கு தொகுதி : இன்று வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது

இந்த தேர்தலில் 1,11,025 ஆண்களும், 1,16,497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 ,27,547 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுஉள்ளன.77வேட்பாளர்கள் இருப்பதால் மாதிரி வாக்கு பதிவு அதிகாலை 4.30மணிக்கேதுவங்கியுள்ளது. ஒரு வாக்குச்சாவடி மையத்தில் 5 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடுகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில்  வாக்குப்பதிவு செய்யப்படுகின்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 52 வாக்கு மையங்களில்  238 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடந்தது. கடந்த 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கே.எஸ். தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  மேனகா ,  தேமுதிக வேட்பாளராக ஆனந்த் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

Related Articles

Back to top button
Close
Close