fbpx
Othersவிவசாயம்

விவசாயத்தில் கோதுமை சாகுபடியை பற்றி காண்போம்!

கோதுமை உலகில் முதன்முதலாக பயிரிடப்பட்ட புல் வகையை சேர்ந்த ஒரு வகை தாவரம் ஆகும். இது உலகில் அரிசி, மக்காசோளத்திற்கு பிறகு அதிகமாக பயிரிடப்படுகிறது.

கோதுமையின் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் ஆகும். தற்போது கோதுமை உலகெங்கிலும் உள்ள அனைத்து இடங்களிலும் பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் வேலூர், சேலம், தர்மபுரி, கோவை, திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் கோதுமை பயிரிடப்படுகிறது.

முன்னொரு காலத்தில் மலைப்பிரதேசங்களில் குளிர் காலத்தில் மட்டுமே கோதுமை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த நிலை மாறி சமவெளியிலும் சாகுபடி செய்து வருகின்றனர்.

கோதுமை விதைப்பதற்கு உகந்த பருவமாக நவம்பர் மற்றும் டிசம்பர் காலம் உள்ளது. இந்த காலத்தில் விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்க பெறும்.

உலகில் வாணிகம் செய்யப்படும் பயிர் வகைகளில், அதிக வாணிகம் செய்யப்படுவது கோதுமை பயிர் வகையே ஆகும். மற்ற பயிர்களை காட்டிலும் அதிக பரப்பளவில் கோதுமை பயிரிடப்படுகிறது.

சோளம் அதிக அளவில் விலங்குணவாக  பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கோதுமை அரிசிக்கு அடுத்தபடியாக மனித உணவுப் பயிராக விளங்குகிறது.

கோதுமை சாகுபடி முதன்முதலில் வளர்பிறை (Fertile Cresent) மற்றும் நைல்
கழிமுகப் பகுதிகளில் பயிரிடப்பட்டது என தொல்பொருள் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகிறது.

கோதுமையில் இரண்டு முக்கியமான வகைகள் உள்ளன. அவை வெண்கோதுமை, செங்கோதுமை ஆகும். மேலும் மஞ்சள், கருப்பு மற்றும் நீல வகை கோதுமை போன்ற சத்துமிக்க வர்த்தக ரீதியாக பயிரிடப்படாத கோதுமை வகைகளும்
உள்ளது.

இந்தியா சீனா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் சிறப்பான நீர்ப்பாசன வசதிகளால் கோதுமை உற்பத்தி அதிகரித்து வருகிறது.

தென்னந்தோப்புகளில் அதிக வெளிச்சம் உள்ள வயல்களில் ஊடுபயிராகவும் கோதுமை பயிர் செய்யப்படுகிறது.

மேலும் கோதுமை, வைக்கோல் கூரை வேயவும் மற்றும் கால்நடை தீவனப் பயிராகவும் பயிரிடப்படுகிறது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close