fbpx
Others

முதல்வரின் கவனத்திற்க்கு……

பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள இந்த புதிய விதிகள் மற்றும் கட்டண உயர்வு பற்றி…..

என்னென்ன பிரச்சனைகள் உள்ளன,

1.) மிகப்பெரிய வருவாய் ஏற்படுத்தித் தரக்கூடிய பத்திர பதிவுத்துறையில் தமிழ்நாட்டில்உள்ளஅலுவலகங்களில் பத்திரபதிவிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அமர்வதற்கு கூட இடம் கிடையாது.     2 ).பண பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பான அறை கிடையாது.     3.) அரசாங்க இடம் இருந்தும் இன்னும் சார்பதிவாளர் கட்டிடங்கள் வாடகை கட்டிடத்தில் தான் இயங்குகின்றன  . 4.)  பத்திர பதிவு முடிந்த பிறகு நில அளவைக்கு பதிவு செய்தால்  செய்த காலத்திலிருந்து மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் கழித்து நில அளவைக்கு வருகிறார்கள், அதுவும் தொடர்ச்சியாக அவர்களை பின்தொடர வேண்டும்,  5.) லஞ்சம் தலைவிரித்தாடும் முதன்மை துறை. பட்டா மாற்றம் செய்ய கேட்டால் பெரும் தொகை லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை. நில அளவைக்கு சர்வே எண்ணுக்கு குறிப்பிட்ட தொகையை பிக்ஸ்டு ஆக கொடுக்க வேண்டிய கட்டாயம்.. 6).கணினி, ஸ்கேனர் மற்றும் இதர உபகரணங்கள் தரமானதாகவும் அதிவேக இணைய தொடர்பில் இணைக்கப்பட்டும் இருக்க வேண்டும்.7.) Inverter மற்றும் Genset வசதிகள் உபயோகப்படுத்தும் தரத்திலும் தேவைப்படும் அளவிலும் நிறுவப்பட வேண்டும்.  8).அடிக்கடி சர்வர் ப்ராபளம் என கால தாமதம் ஏற்பட்டுபதிவுநேர டோக்கன் முறை தள்ளி போவதை சரி செய்ய உயர் ரக சர்வர்கள் நிறுவப்பட வேண்டும்.  9). 90 சதவீத வாடிக்கையாளர்கள் நடுத்தர, உயர்மட்ட தொழில் புரிவோர் என கவணத்தில் கொண்டு குளிரூட்டப்பட்ட waiting hall மற்றும் கழிவறை வசதிகள்,
கார் நிறுத்த போதுமான இடவசதி,&.சிற்றுண்டி விற்பனையகம் அமைக்கப்படவேண்டும். 10).இருக்கும் நிலையை பார்க்கும் போது வணிக, அலுவலக கட்டிடங்களுக்கு DTCP ஒப்புதல் தர மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பதிவு அரசு அலுவலகங்களுக்கும்கட்டாயமாக்கபட வேண்டும்   11).இதற்கான அளவீடுகளை அந்தந்த பதிவு அலுவலகங்களில்பெருமையாககுறிப்பிட்டுள்ள வருடாந்திர வருமான இலக்கை வைத்து உபயோகிப்பாளர்களுக்கான தேவையான வசதிகளை முடிவு செய்து விதிகள் வரையரைக்கப்படவேண்டும். ஆனால் இருக்கும் நிலமையோ..…? 12 ) சார்பதிவாளர் ஏதோ ஒரு குறுநில அரசர் போலவும்,மற்ற அலுவலர்கள் அமைச்சர்கள் போலவும், வாடிக்கையாளர்களை.. இங்க நில்..அங்கநில்.. வெளிய போ.. என மூன்றாம் தரத்தில் நடத்துவது……?.  13 ) தற்போது செயல்படும் பதிவு அலுவலகங்களை பார்க்கும் போதுவாடிக்கையாளர்கள்அங்கங்கு கிடைக்கும் மூலைகளிலும் தெருவிலும் கும்பலாக அமர்ந்து கொண்டு வேகாத வெய்யிலிலும், மழை வந்தால்ஒதுங்கவழியில்லாமலும் மொத்தத்தில்ஒரு எழவு விழுந்த வீடு போல காட்சி அளிப்பது வேதனையான அம்சம்.  14) இதையெல்லாம் அரசாங்கம் கவனத்தில் கொண்டு ஒரு பாஸ்போர்ட் வாடிக்கையாளர் சேவை மய்யம் போல மாற்றிஅமைக்க வேண்டும்.   WHY NOT…?

 

 

 

.

.

 

 

 

.

 

 

15) இதையெல்லாம் அரசாங்கம் கவனத்தில் கொண்டு ஒரு பாஸ்போர்ட் வாடிக்கையாளர் சேவை மய்யம் போல மாற்றி
அமைக்க வேண்டும்.
அல்லது இதற்கும் ஒரு பொதுநல வழக்கு யாராவது ஒருவர் consumer court இல் தொடரந்தால்
தான் எல்லாம் சரியாகுமோ?

Related Articles

Back to top button
Close
Close