fbpx
Others

முதல்முறை.. ஸ்டாலின் போட்ட உத்தரவு..?

வரலாற்றிலேயே முதல்முறை.. ஸ்டாலின் போட்ட உத்தரவு.. பறந்து வந்த குட்நியூஸ்.. ஆஹா எதிர்பார்க்கலையே!
  •  கடந்த வருடம் சென்னையில் கடும் மழை மற்றும் மாண்டஸ் புயல் தாக்கிய நிலையிலும் சென்னை பெரிய பாதிப்பு எதுவும் இன்றி சேதங்களில் இருந்து தப்பித்தது.இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.பொதுவாக சென்னையில் 1 மணி நேரம் மழை பெய்தாலே சாலை வெள்ளக்காடு போல காட்சி அளிக்கும். மெரினா பீச் நடந்து வந்து சிட்டிக்கு உள்ளே டென்ட் போட்டது போல வெள்ளக்காடாக காட்சி அளிக்கும். சென்னையில் பல்வேறு தெருக்களில் கடுமையாக மழை நீர் தேங்குவதே வழக்கம்முக்கியமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினால் தினசரி சாலைகளில் வெள்ளத்தை பார்க்க முடியும். அதிலும் டிசம்பர் மாதங்களில் சாலைகளில் ஸ்விம்மிங் அடிக்கும் நிலை ஒவ்வொரு வருடமும் ஏற்பட்டு வந்தது. இதனால் மக்கள் வருடா வருடம் அவதிப்படுவார்கள்.

 முக்கியமாக கடந்த 2021 வருடமும் சென்னையில் சாலைகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. 2021 டிசம்பர் மாதம் பெய்த மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து சென்னையில் வெள்ள நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதாவது சாலைகளின் ஓரம் வெள்ள நீர் வெளியேறுவதற்காக மிகப்பெரிய அளவில் குழாய்கள் அமைக்கப்படும். ஆறுகளில் கலக்கும் வகையில் சென்னை முழுக்க இதற்காக குழாய்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் மிக தீவிரமாக செய்யப்பட்டன. 10 மாதத்தில் 90 சதவிகித பணிகளும் முடிக்கப்பட்டன.  வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.கிட்டத்தட்ட இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வந்தனர். இந்த கால்வாய்கள் எல்லாம் மழை நேரத்தில் மிகப்பெரிய அளவில் சென்னை மக்களுக்கு உதவியாக இருந்தது. கடந்த முறை மழை காரணமாக சென்னையில் பல சாலைகளில் வெள்ளம் ஏற்படாமல் தண்ணீர் வேகமாக வடிந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் மழை பெய்த போது வெள்ளம் வேகமாக வடிகிறதா என்று சோதனை செய்யப்பட்டது. அதன்படியே வேகமாக வடிந்தது. 

அதன்பின் சென்னையில் மாண்டஸ் புயல் தாக்கிய போதும், அதற்கு முன்பும், பின்பும் கூட மழை கடுமையாக பெய்தது. அப்போதும் கூட சென்னையில் வெள்ளம் ஏற்படவில்லை. இந்த வடிகால் காரணமாக தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. சென்னையில் இதனால் இந்த முறை வெள்ளம் ஏற்படவே இல்லை. தண்ணீர் தேங்கிய இடங்களிலும் வேகமாக வடிந்தது. இன்னொரு பக்கம் சென்னையில் புயல் தாக்கிய போது விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. சாலைகளில் மரங்கள் உடனே உடனே அகற்றப்பட்டன.இதனால் போக்குவரத்து நெரிசல் தடுக்கப்பட்டது. அதேபோல் இரவோடு இரவாக சாலைகளில் குப்பைகளும் அகற்றப்பட்டன. இதற்கான எண்ணற்ற தூய்மை பணியாளர்கள் சாலைகளில் இறங்கி பணிகளை செய்தனர். ஆயிரக்கணக்கான பெண் தூய்மை பணியாளர்கள் சாலைகளில் இறங்கி தீவிரமாக பணிகளை செய்தனர். சென்னை பெரும் புயலில் இருந்து உடனே மீண்டு வர மிக முக்கிய காரணமாக அமைந்தது தூய்மை பணியாளர்களின் உழைப்புதான். பொதுவாக அரசை பாராட்டும் மக்கள் கீழே வேலை செய்யும் தூய்மை பணியாளர்களை பாராட்ட மறந்துவிடுவார்கள்.

இந்த நிலையில்தான் இந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். சென்னை மாநகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், வார் ரூம் ஊழியர்கள் என்று மழை நேரத்தில் உழைத்தவர்களுக்கு எல்லாம் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. ஜனவரி 31ம் தேதி இந்த பாராட்டு விழாவை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு பாராட்டு விழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


Related Articles

Back to top button
Close
Close