fbpx
Others

புழல் காவாங்கரையில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் மக்களைத் தேடி மருத்துவ முகாம்.

புழல் அடுத்த காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மக்களை தேடி மருத்துவ முகாமை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தொடங்கி வைத்தார்.இம்முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு அரசு மருத்துவர்களால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாதவரம் மண்டல ஆணையர் சங்கர், சுகாதார அலுவலர் மருத்துவர் இளஞ்செழியன், பொறியாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், மாதவரம் மண்டக் குழுத் தலைவர் நந்தகோபால், பகுதி கழக செயலாளர் புழல் எம்.நாராயணன், வட்டச் செயலாளர் குப்பன், சிவக்குமார், சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மிக்ஜாம் புயல் நிவாரண உதவியாக 6000 ரூபாய் வழங்கிட வேண்டும் என முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஏற்கனவே மாதந்தோறும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து நிதிநிலைமைக்கு ஏற்ப திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close