fbpx
Others

திருவள்ளூர் மாவட்டஆட்சிதலைவர் நேரடி கவனத்திற்க்கு..?

திருவள்ளூர் மாவட்டம். புழல் ஒன்றியம். தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி .சப்தலஷ்மி நகர் பகுதியில் மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி அதிகமாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.கழிவுநீர்செல்வதற்குகால்வாய்அமைக்கவும்
சாலைகளைசீரமைக்கவும்.தரமானகுடிநீர்கிடைக்ககுழாய்அமைக்கவும்.தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும்.எனவும் இப்பகுதி குடியிருப்போர் ஊராட்சியை மன்ற தலைவரிடமும்.கிராம சபாவிலும் கோரிக்கை மனுவை அளித்து இருக்கிறார்கள். இதுவரை ஊராட்சி சார்பிலும் .அரசு சார்பிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைசமீபத்தில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.இந்தப் பகுதியிலும் சிலருக்கு இருமல் ஜுரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது.ஆகவே அரசு உள்ளாட்சித் துறையும்.சுகாதார துறையும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து இங்கு குடியிருக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று இப்பகுதி குடியிருப்போர் சார்பில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.விரைவில்
 உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டம்.சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு அரசுக்கு தங்கள் வேதனையை தெரிவிக்க போவதாக இப்பகுதி தாய்மார்கள் கண்ணீரோடு தெரிவித்தார்கள்.

 

Related Articles

Back to top button
Close
Close