fbpx
Others

எளிதாக தொழில் தொடங்கும்மாநிலங்களில்தமிழ்நாடு–மு.க.ஸ்டாலின்

 மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதல்வர் தலைமையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தெற்கு மண்டல மாநாடு தொடங்கியது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடக்கும் தென்மண்டல மாநாட்டில் தொழில்துறையின் பங்கேற்றுள்ளனர். கரூர், ராமநாதபுரம் தொழிற்பேட்டையில் ரூ.2.83 கோடியில் பொது வசதி கட்டிடங்கள் திறக்கப்பட்டது. வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கு ஆன்லைன் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கி வைத்துள்ளேன். தொழில்கள் மூலம் மட்டுமே ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில் மட்டும் அல்ல, சிறிய தொழில்கள் வளர்வதும் ஆகும் என்றார்.
சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 5,000 பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 3.37 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் 18 பொருட்கள் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
எளிதாக தொழில் தொடங்கும் மாநிலம் – தமிழ்நாடு 3வது இடம்
எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழ்நாடு விரைவில் முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் புத்தொழில் பெற வேண்டும் என்பதே இலக்கு.
மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல் கட்டத்தில் ரூ.600 கோடி திட்ட மதிப்பில் 5 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. டைடல் பார்க், மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். 2000ம் ஆண்டு கலைஞர் திறந்து வைத்த டைடல் பூங்கா, மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னோடியாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப புரட்சியை தமிழ்நாட்டின் 2,3ம் நிலை நகரங்களுக்கும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். டைடல் நிறுவனம் கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாகிறது. திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர், உதகையில் நியோ டைடல் பூங்காக்களை அரசு உருவாக்கி வருகிறது என கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close