fbpx
Others

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை. சிறப்பு செய்தி

சிலிர்க்கவைக்கும் செஞ்சி கோட்டை.
போர் ….போர்…போர்…
மின்னும் வாள் வீச்சு
மிரளவைக்கும் ஈட்டிகளின் பாய்ச்சல்..
பிளிறும் யானைகள்
பீரங்கியில் இருந்து புறப்பட்ட குண்டுகள்
புயலென பாய்ந்த குதிரைகள்…
போர்முழக்கமிட்ட சிப்பாய்கள்…
ரத்த துளிகளின் சுவை பருக வட்டமிடும் கழுகுகள்…
ரத சக்கரங்களை உருளவைக்கும் சதை குவியல்கள்..
இவ்வாறு போர்பல கண்டது அந்த கோட்டை.
விழுப்புண் பெற்றாலும் விம்மி நிமிர்ந்து நிற்கும் வரலாற்று சின்னம்.
சேதாரம் இருந்தாலும் சிறுகுறையும் இல்லாத தங்க பொக்கிஷம்..
: ஆண்டுகள்பல போனாலும் அழகு பதுமையாக காட்சி தரும் ஒருசிலகோட்டைகளில்
தலைசிறந்த கோட்டையாக விளங்குவது செஞ்சி கோட்டை.
 எது அந்த கோட்டை…
ஏன் இவ்வளவு பீடிகை என்று கேட்கலாம்
ஆண்ட மன்னர்களின் அரண்மனைகள் பல
அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டன.
கொடிபறக்க வாழ்ந்த பல கோட்டைகள்…இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன.
 வீரம்மிகுந்த விழுப்புரம் மாவட்டம்..அதில் ஒருபகுதிதான் செஞ்சி.இது திண்டிவனத்திலிருந்து மேற்கே 27கிலோ மீட்டர் தூரத்திலும் திருவண்ணாமலையிலிருந்து கிழக்கே 38 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.சுற்றிலும் காடுகள்…நடுவில் ஆங்காங்கே மலைக்குன்றுகள் .ஓரங்களில்..இயற்கையின் எழில் கொஞ்சும் பசுமையான மரங்கள்..
இத்தகைய அழகு நடமாடும் இடத்தில் 3பெரிய மலைகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்டதே செஞ்சி கோட்டை..
800அடி உயரம். ..1012 படிக்கட்டுகள் . ..அதில் நடக்க தெம்பிருந்தால் நீங்கள் மேலே நடக்கலாம் …இந்த கோட்டை சாதாராண கோட்டை அல்ல. .மலைக்கவைக்கும் மலைக்கோட்டை ..கருங்கற்களாலும் சுண்ணாம்பு கலவையாலும் செய்யப்பட்ட கலைக்காவியம்.
60அடி அகலம் உள்ள கோட்டையில் 12கிலோ மீட்டர்தூரம் பிரமாண்ட மதில்சுவர்.
: கோட்டையை சுற்றி 80அடி அகலத்தில் அதிரவைக்கும் அகழி.அதில் நீந்தி பயமுறுத்தும் ராட்சத முதலைகள்…எதிரிகளின் இறைச்சிக்காக காத்திருக்கும் அவைகளின் கண்களில் தீப்பொறிபடையெடுத்து வரும் பகைவரை ஓட ஓடவிரட்டவும்..கோட்டையில் இருக்கும் மக்களை கொத்தாக அள்ளிச்செல்லாமல் காக்கவும் அரண்போல் அமைந்துள்ளது கோட்டை.
அந்த அழகு கோட்டைக்குள் அணிவகுக்கும் அம்சங்களை கொஞ்சம் பார்ப்போமா. .முதலில் ராஜகிரி கோட்டையை நாம் வலம் வருவோம்…
இந்த கோட்டையில் நாம் உள்ளே சென்றால் சுழலும் பீரங்கி மேடை நம்மை மிரட்டும்கருங்கற்களால் கட்டப்பட்ட மேடை. அதில் எதிரிகள் எந்தபக்கம் வந்தாலும் சுழன்று தாக்கும் பீரங்கிகள்…நாம் காணலாம்.
இதை கடந்து சென்றால் கலைநயம்மிக்க கல்யாண மகால் நம்மை வரவேற்கும்..இந்த மகாலின் உச்சியிலே..பிரமீடுபோன்ற அமைப்பு…கண்களை கவரும்..இந்திய இஸ்லாமியபாணியில் உருவான இந்த மகாலில்மங்கையர்கள் தங்க தனி இடம்..அவர்கள் குளித்துமகிழ குளிர்ச்சியான குளம் நெஞ்சை கவரும்.எட்டு அடுக்குகளை கொண்டது இந்தமகால்.ஒவ்வொரு அடுக்கின் அறையின் இருபுறங்களிலும் இறங்குவதற்கும் மேல் அடுக்கு அறைகளுக்கு செல்வதற்கும் வழிப்பாதைகள் உண்டு.அறைகளின் சுவர்களின் உட்பகுதியில் சுடுமண்குழாய்களை பொருத்தப்பட்டுள்ளன…
 கல்யாண மகாலின் தெற்கு பகுதியில் பெரிய அளவில் உள்ள குளத்தை நீங்கள் காணலாம் .இந்த குளம் 50மீட்டர் நீளம் 40 மீட்டர் அகலம்15 மீட்டர் ஆழம் கொண்டது. அகன்ற இந்த குளம் யானைக்குளம் என்று அழைக்கப்பட்டது.இங்கு யானைகள் இறங்கி குளித்து சென்றதாக கூறப்படுகிறது.அதுமட்டுமல்லாமல்அரசர்கள் அரச குடும்பத்தினர் இங்கு நீச்சல்பயிற்சி பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானை குளம் தாண்டினால்கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை பார்க்கலாம்.இந்த இடம் வீரர்கள் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்யும் இடமாக அமைந்திருந்தது.எதிரிகளை பந்தாட போர்கருவிகளை ரகசியமாக பாதுகாக்கும் இடமாகவும் இருந்தது.யானை குளத்துக்கு மேற்கே சதுரமான ஒரு மேடை நம் கண்ணுக்கு தெரியும்.பாறையை குடைந்தெடுத்துஅதனை சுற்றிலும் கருங்கற்களாலான சுவர் கட்டப்பட்டிருக்கும்.இது சாதாரணமான இடம் இல்லை .தொடாதே ..அபாயம் என்ற ரகம்.அதாவது. வெடி மருந்து கிடங்கு. அந்த பகுதியை நெருங்காமல் வேறு பகுதிக்கு வாருங்கள்…ராஜகிரிகோட்டைக்குள் நுழையும் முதல் நுழைவாயிலின்முன் இடதுபுறமாகஒருகட்டிடம்இருக்கும்.கருங்கற்களைக்கொண்டு 2மீட்டர் அகலத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கும்.இது தானிய களஞ்சியம்.இதில் தானிய வகைகள் குவித்துவைக்கப்பட்டிருக்கும் தானியங்கள் சேமித்துவைக்கப்பட்டிருக்கும்.போர் ஏற்பட்டால் பல ஆண்டுகள் கோட்டையில் இருப்பவர்களுக்கு உணவு பஞ்சம் ஏற்படாமல் காக்கும்.எத்தகைய அரிய ஏற்பாடு
ராஜகிரி கோட்டையில் நீங்கள் பார்க்க வேண்டிய மற்றோரு..திகிலான இடம் இழுவைபாலம்.மரப்பலகையால் அமைக்கப்பட்டது இந்த பாலம்.20அடி நீளமும் 6அடி அகலமும் கொண்டது இந்த பாலம்.இதன்வழியாகத்தான் ராஜகிரி கோட்டைக்குள் போகமுடியும். தொடரும்

Related Articles

Back to top button
Close
Close