fbpx
Others

ராகுல்காந்தி மே 21-ந் தேதி சென்னை வருகை

 ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மே 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்க இருக்கிறார். கர்நாடகத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்று, வகுப்புவாத சக்திகளை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ராகுல்காந்தி வருகை புரிவது மிகுந்தஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி 21-ந்தேதி அஞ்சலி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காங்கிரசார் அணி திரள வேண்டும் கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி மேற்கொண்ட வகுப்புவாத, அவதூறு பிரசாரத்தை முறியடித்ததில் ராகுல்காந்திக்கு பெரும் பங்கு உண்டு. கர்நாடகத்தில் அவர் பாதயாத்திரை மேற்கொண்ட பாதையில் அமைந்துள்ள 51 சட்டமன்றத் தொகுதிகளில் 37-ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலம் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தி இருக்கிற ஆட்சி மாற்றம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் அமைந்துள்ள மோடியின் பாசிச, ஜனநாயக விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்ற ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு ராகுல்காந்தி 21-ந்தேதி அன்று காலை வருகை புரிகிறபோது, காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணி திரண்டு பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Related Articles

Back to top button
Close
Close