fbpx
Others

பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்

 இந்த நிலையில் விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் பொதுவெளியில் அதிகம் வருவதில்லை. சுதந்திர தினம், கேப்டன் பிறந்தநாளுக்கு தேமுதிக அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு தொண்டர்களை பார்த்து பூரித்து போனார். இதையடுத்து ஆங்கில புத்தாண்டு அன்று விஜயகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார்.

அப்போது தனது வழக்கமான ஒன்றை மறக்காமல் விஜயகாந்த் கடைபிடித்தார். அதன்படி தன்னை பார்க்க வந்த அனைவருக்கும் புதிய ரூபாய் நோட்டுகளை விஜயகாந்த் வழங்க ஆசைப்பட்டார். இதன் பிறகு பிரேமலதா தொண்டர்களுக்கு புதிய ரூ 100 ஐ கேப்டன் சார்பாக பிரேமலதா வழங்கி மகிழ்ந்தார். பின்னர் அனைவருக்கும் கைகளை அசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை விஜயகாந்த் சொன்னார்.

விஜயகாந்தின் கம்பீர குரலை கேட்க முடியாமல் தொண்டர்கள் கண் கலங்கியது. “இந்த ஆண்டுக்குள் கேப்டன் உடல்நிலை சரியாகி அவர் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக வர வேண்டும் என தொண்டர்களும் பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜயகாந்த் தரிசனம் புகைப்படங்கள் மூலமாக கிடைக்காதா என தொண்டர்களும் ரசிகர்களும் ஏங்கிக் கொண்டிருந்தனர்.அந்த வகையில் சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் எளிமையான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். மண் பானையில் பொங்கல் வைத்து கோ பூஜை செய்து தன் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். நாற்காலியில் அமர்ந்தபடி கண்ணாடி அணிந்து கொண்டு கைகூப்பியபடி பூஜையில் பங்கேற்றார்.

பச்சை நிறத்தில் ஆன சட்டை அணிந்திருந்தார். நெற்றியில் திருநீறு பட்டையும் இருந்தது. பிரேமலதாவும் பச்சை நிற புடவையில் இருந்தார். விஜயபிரபாகன் நீல நிற சர்ட்டிலும் காக்கி நிற பேண்டிலும் இருந்தார். இஅது போல் இளைய மகன் சண்முகபாண்டியன் நீளமான முடி, தாடியுடன் வேஷ்டி சட்டை அணிந்துக் கொண்டிருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close