fbpx
Others

பிரதமர் மோடி—பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

  • டெல்லியில் பாஜகவின் 2 நாட்கள் செயற்குழு கூட்டத்தில் ஜெ.பி.நட்டாவின் பதவி காலம் வருகிற 20 ஆம் தேதி முடிவடையும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படும் என  பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதவிக்காலம் நீட்டிப்பு? தகவல்கள் வெளியாகியுள்ளது.டெல்லியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்துக்கு பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தின் முதல் நாளில் அனைத்து மாநில செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.குஜராத் வெற்றிக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், எதிர்வரும் 9 சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ.பி.நட்டாவின் பதவி காலம் வருகிற 20 ஆம் தேதி முடிவடையும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பொருட்டு பிரதமர் மோடி பேரணியாக வந்தார். காரின் கதவை திறந்து நின்றபடியே பேரணியாக வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக்கிலும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களை தூவி தங்கள் மகிழ்ச்சி வெளிபடுத்தினர். பலவீனமாக உள்ள பூத்துக்களை கண்டறிந்து வலிமைப்படுத்த வேண்டும் என்றும் ஒரு தொகுதியில் கூட தோல்வியடைய கூடாது என்றும் பாஜகவினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close