fbpx
Others

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர்…..

செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பல்வேறு முக்கியநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்; ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் ஆகிறதா? பரபரப்பு தகவல் முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியானது.இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் வாய்ப்பிருப்பதாகவும் பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. பொதுவாக நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு தனித்தனியே தேர்தல் நடத்துவதால் செலவு அதிகம் என்கிற கருத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு நீண்ட நாட்களாகவே சொல்லி வருகிறது. ஆனால் நடைமுறையில் கொண்டு வருவதற்கு பல சிக்கல்கள் இருப்பதால் தயக்கம் காட்டி வந்தது. இந்த நிலையில், தான் ஒரே நாடு தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆங்கில தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நிறைவேறி, நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழகத்தில் திமுக ஆட்சியும் கலைக்கப்படும் நிலைமை உருவாகும். இதேபோல மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநில சட்டசபைகளின் ஆயுட் காலம் முன்கூட்டியே முடித்து வைக்கப்படக் கூடிய அபாயமும் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், இந்த அக்கினிப்பரிட்சைக்கு மத்திய அரசு தயராகுமா? என்ற விவாதமும் எழும்பியுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close