fbpx
Others

தேனி மாவட்டம்–சின்னமனூர்–ஆடித்திருவிழா

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடித்திருவிழா

இரண்டு வருடங்களுக்கு பிறகு கொடியேற்றத்துடன் துவங்கியது.

சின்னமனூர் : ஜூலை : 24. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் ஆடிப்பெருவிழா இந்து அறநிலைத் சார்பில் கொடியேற்றத்துடன் வெகு விமர்ச்சையாக திருவிழா தொடங்கியது இந்திலையில் .கடந்த 2 ஆண்டுகளாய் கொரோனா பரவல் காரணமாக இக்கோயிலில் நடைபெற்ற ஆடித்திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு இந்தாண்டு ஆடித்திருவிழா ஜூலை 23 சனிக்கிழமையன்று தொடங்கி ஆகஸ்ட் 20 இந்த சனிக்கிழமையோடு அடுத்து வரும் இரண்டு சனிக்கிழமை வரை சிறப்பாக நடைபெற உள்ளன
மேலும் ஆடிப்பெருவிழமுதல்வாரத் சனிகிழமை திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை கலிப்பணம் கழித்து,சுத்தநீர் தெளித்தலும், கோயில் வளாகத்தில் கொடியேற்றமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமி திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு, சாத்துப்படி செய்தல்,கருப்பண சுவாமிக்கு பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் வாரங்களில் சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளுக்குப்பின்பு நடைபெறும் ஆடித்திருவிழாவை கவனத்தில் கொண்டு தமிழகம்,கேரளம்,ஆந்திரம்,கர்நாடகம் என அண்டை மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் போக்குவரத்து ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

அதுசமயம், கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்தில் 6 ஆயிரம் சதுரஅடி பரப்பளவுக்கு இரும்புத்தகரத்தால் பந்தல் அமைத்தும், மூங்கில் கம்புகளில் தடுப்பு வேலி அமைத்தும் பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க தீவிர பாதுகாப்புப் பணிகளும் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, மதுரை, திண்டுக்கல்,பெரியகுளம்,போடி,தேவாரம்,கம்பம், சின்னமனூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்புப்பேருந்துகள்இயக்கஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close