fbpx
Others

உறைந்து போன ரஷ்ய நகரம் …….?

"மைனஸ் 50 டிகிரி" செல்சியஸ்.. செவ்வாய் கிரகத்திற்கு இணையான குளிர்.. அப்படியே உறைந்து போன ரஷ்ய நகரம்
  • மாஸ்கோ: பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகின் வளர்ந்த நாடுகள் கூட இதில் இருந்து தப்புவதில்லை.இதனிடையே ரஷ்ய நகர் ஒன்றில் வெப்ப நிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது.புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது வானிலை பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகள் தொடங்கி அனைத்தும் பருவ நிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்தாண்டு அமெரிக்கா, கனடா நாடுகளில் கடுமையான வெப்பம் ஏற்பட்டது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல ஐரோப்பாவில் மழை வெளுத்து வாங்கியது.

 இதனிடையே இப்போது ரஷ்யாவில் மிகக் கடுமையான குளிர் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகக் குளிரான நகரம் என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவின் யாகுட்ஸ்கில் நகரில் இப்போது கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. அங்கு இந்த வாரம் வெப்பம் மைனஸ் 50 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. பொதுவாக ஜீரோ டிகிரிக்கு கீழ் சென்றாலே தண்ணீர் கூட உறைந்துவிடும். ஆனால், இந்த ரஷ்ய நகரில் அதற்கும் கீழ் வெப்பம் சென்று மைனஸ் 50 டிகிரியாக பதிவாகியுள்ளது.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலில் இருந்து கிழக்கே 5,000 கி.மீ தொலைவில் இந்த யாகுட்ஸ்க் நகரம் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் உறை பனி இருந்து கொண்டே தான் இருக்கும். சுரங்க நகரமான இந்த யாகுட்ஸ்க்கில் வெப்ப நிலை அடிக்கடி மைனஸ் 40 கீழ் செல்லும். இந்தச் சூழலில் தான் இப்போது வெப்ப நிலை அதற்கும் கீழ் சென்று -50 டிகிரியை எட்டியுள்ளது. இந்த கடுங்குளிரால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன..

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “உங்களால் இதை எதிர்த்துப் போராட முடியாது. நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அதற்கேற்ப உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் இந்த குளிர் சிக்கித் தவிக்க வேண்டியது தான்.. உலகின் வேறு எந்த பகுதியிலும் இந்தளவுக்குக் குளிர் இருக்காது. உலகின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோரால் இந்த வெப்ப நிலையை நிச்சயம் சமாளிக்கவே முடியாது” என்று கூறுகின்றனர்.

இந்த குளிரால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குளங்கள், ஆறுகள் அனைத்தும் உறைந்து போய் கிடக்கிறது. உணவுப் பொருட்களும் கூட இதை நிலை தான். இந்த கடும் குளிரால் மீன், சிக்கன் உட்பட அனைத்து இறைச்சிகளும் உறைந்து போய் விடுகின்றன. இந்த கடும் குளிரால் பொதுமக்களால் வெளியே கூட இயல்பாகச் செல்ல முடிவதில்லை என்று அங்குள்ளவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.புவி வெப்ப மயமாதல் காரணமாக உலகின் வெப்ப நிலை தொடர்ந்து மாறி வருகிறது. வெயில் என்றாலும் சரி குளிர் என்றாலும் சரி அது மிக மோசமாகவே இருந்து வருகிறது. மனித இன வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2022 இருக்கிறது. வெப்பம் இப்படித் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பனிப்பாறைகளும் வேகமாகக் கரைந்து வருகிறது. இதனால் கடல்களில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடல் நீர்மட்டம் இப்படி அதிகரித்து வருவதால், பல நகரங்கள் மூழ்கும் அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்காமல் இதே நிலை தொடர்ந்தால் அடுத்து வரும் காலத்தில் பல நகரங்கள் நீர் மூழ்கும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா கூட தனது தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து கிழக்கு கலிமந்தன் மாகாணத்தில் அமைந்துள்ள நுசாந்தரா நகருக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது…..

Related Articles

Back to top button
Close
Close