fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு ; நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

மத்திய பிரதேசம்,குஜராத், பாட்னா, திரிபுரா ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் குப்தா, சுபாஷ் ரெட்டி , எம்.ஆர்.ஷா , அஜய் ரஸ்தோகி போன்றோரை சுப்ரீம் கோர்ட் நீதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு மத்திய அரசு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்று கொண்ட சட்ட அமைச்சகம் , அதன் ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது.கொலிஜியதின் பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு நேற்று முன்தினம் தான் ஒப்புதல் வழங்கினார்.

அதன் அடிப்படையில் அந்த 4 நீதிபதிகளையும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றுக்கொண்டனர். அதனால் இப்போது சுப்ரீம் கோர்ட்டின் மொத்த நீதிபதிகளின் எண்னிக்கை 28-ஆக உயர்ந்தது.

Related Articles

Back to top button
Close
Close