பெங்களூரு: நாட்டில், சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலமாக, கேரளா திகழ்வதாக, பி.ஏ.சி.நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
பி.ஏ.சி., எனப்படும், பொது விவகாரங்கள் மையம் எனப்படும், அறிஞர்கள் குழு நடத்திய ஆய்வு முடிவுகள் விபரம் வருமாறு:
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில், சிறந்த நிர்வாகம் நடக்கும் முதல் மாநிலமாக, 2016 முதல், மூன்றாவது முறையாக, கேரளா தேர்வாகியுள்ளது.
தமிழகம், இரண்டாம் இடத்தையும், தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள், முறையே, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடமும் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் கடைசி இடங்களை, ம.பி., ஜார்க்கண்ட், பீஹார் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.
இம்மாநிலங்களில், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் உள்ளன.
இரண்டு கோடிக்கு குறைவான மக்கள் தொகையுள்ள சிறிய மாநிலங்களில், ஹிமாச்சல், சிறந்த நிர்வாகம் நடக்கும் முதல் மாநிலமாக தேர்வாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, கோவா, மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
சிறிய மாநிலங்களில், மோசமான நிர்வாகம் உள்ள மாநிலங்களாக, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இவ்வாறு அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.