fbpx
Others

புழல்– பூமியில் டோரன்ட் கேஸ் பைப் லைன் பதிப்பு.. பீதியில் பொது மக்கள்.


மாமன்ற கூட்டத்தில் அதிகாரிகளை வச்சு செஞ்ச கவுன்சிலர்..

சென்னை மாவட்டம்1\9\2023 வெள்ளிக்கிழமை

மாதவரம் மண்டலம் 23, 24, 30, 31, 32, 33 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளான புழல், காவாங்கரை, சக்கரலிங்கனார் தெரு, பாரதிதாசன் தெரு, அழகிரி தெரு, கண்ணப்ப சாமி நகர், கன்னடபாளையம், குருசாந்தி நகர், திருநீலகண்ட நகர், சக்திவேல் நகர், தமிழன் நகர், தனலட்சுமி நகர், பாலாஜி நகர், என். எஸ். கே. தெரு, ஸ்டீபன் திருமாறன் தெரு, தாளமுத்து நடராஜன் தெரு, புனித அந்தோணியார் கோவில் தெரு, இரட்டை மலை சீனிவாசன் தெரு, எம்.எம். பள்ளி தெரு, காளி தெரு, கல்யான் தெரு, மேட்டு தெரு, அண்ணா நினைவு நகர், திருவள்ளுவர்7 தெரு, ஒற்றைவாடை தெரு, கங்காதரன் தெரு, கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், கலெக்டர் நகர், பத்மாவதி நகர், லட்சுமிபுரம், ரெட்டேரி, கல்பாளையம், விநாயகபுரம், டீச்சர்ஸ் காலனி, புத்தகரம், சூரப்பட்டு, பாரதிதாசன் நகர், சண்முகபுரம், மாதவன் நகர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லாத டோரன்ட் கேஸ் பைப் லைனை, குறிப்பாக மிகவும் குறுகிய குறுக்கு தெருவான புழல் லட்சுமி அம்மன் கோயில் தெரு, திருவீதி அம்மன் கோயில் தெரு, மற்றும் டாக்டர் அம்பேத்கர் தெரு வழியாக பூமியில் புதைத்து கொண்டு போக காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.  இந்த டோரன்ட் கேஸ் வீடுகளுக்கு இணைக்கப்படும் என்றால் அனைத்து தெருக்களிலும் அமைக்க வேண்டுமல்லவா என கேள்வி எழுப்பும் பொதுமக்கள்..!     மூன்று தெருக்களுக்கு மட்டும் தான் அனுமதியா அல்லது அனைத்து வார்டு பகுதிகளுக்கும் அனுமதி உண்டா எனவும். மூன்று தெருக்களின் வழியாக எங்கு செல்கிறது என்ற கேள்வியையும் மக்கள் முன்வைக்கின்றனர்,  மேலும் லட்சுமி அம்மன், திருவீதி அம்மன், டாக்டர் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் மக்கள் மிகவும் அச்சத்திற்குள்ளாகி வருவதை
குறித்தும், அதிகாரிகள் கண்டுக்கொள்ளாததை பற்றியும், 31\8\2023 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்,புழல் 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ. சேட்டு கடுமையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி உயரதிகாரிகள் புழலில் நடைபெறும் கேஸ் லைன் புதைக்கப்படும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு மக்களின் அச்சத்தை போக்குவார்களா என்பது மிகுந்த எதிர்ப்பார்ப்பு…!

Related Articles

Back to top button
Close
Close