fbpx
Others

தேனியில் மாரத்தான் போட்டியில்நடந்தது என்ன…உரிய நீதிஉடனடி தேவை…?

தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த சிறுமிகள் ??? தேனியில் மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த சிறுமிகள் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அந்த சிறுமிகள் நம் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எங்கள் பகுதி வீராங்கனைகள். தடகள போட்டிகளில் தொடர்ந்து முத்திரை படைத்து வரும் ரெட்டியார்பட்டி கிராமத்தின் வீராங்கனைகள் என்றார்கள்.போட்டி ஏற்பாட்டில் பல குளறுபடிகள். எந்த முன்னேற்பாடும் இன்றி ஏற்பாடு செய்யப்பட்ட மாரத்தானுக்கு அனுமதி வழங்கிய காவல்துறை அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த இடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யாரும் புனிதர் பட்டம் கொடுத்து விட வேண்டாம் ?  துடித்த குழந்தைகளின் வலிகளுக்கு அவர்களும் முதன்மை காரணம். போட்டி ஏற்பாட்டு குழுவினர் மீது அரசியல் அழுத்தங்களை கடந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்பது ஏமாற்றத்துடன் திரும்பிய வீரர், வீராங்கனைகளின் வலியுறுத்தல். காவல்துறை இணைந்து நடத்தும் போட்டி என்ற அறிவிப்பை நம்பித்தான் மாநிலம் முழுவதிலும் இருந்து வீரர், வீராங்கனைகள் தேனி இனிமையான ஊர் என்ற நம்பிக்கையோடு வந்தார்கள் ! அந்த நம்பிக்கை சுக்கு நூறாய் நொறுக்கி தகர்க்கப்பட்டுள்ளது ? இனி தேனி என்றாலே இந்த இளம் தலைமுறையினர் மத்தியில் அவ நம்பிக்கை ஏற்படும் என்பது இயற்கை... இந்த கருத்தை இங்கே பத்திரிக்கையாளனாய் , நான் பதிவிட விரும்பவில்லை. மயங்கி விழுந்து துடித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் சகோதரனாய் குமுறுகிறேன்…… எங்கள் குழந்தைகளுக்காய் குரல் கொடுக்காவிட்டால், என் அறம் மரித்துப் போனதற்கு சமம்  எங்கள் குழந்தைகளின் வலிகளுக்கு உரிய நீதியை அரசு கொடுத்து தேனி மீது இன்று படிந்த கரை துடைத்தெறியப்பட வேண்டும், செய்யுமா இந்த அரசு? ………. ISCUF – மாநிலக் குழு உறுப்பினர் , ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close