fbpx
Others

தெரிந்து கொள்ளுங்கள்……?

நீர்மூழ்கி கப்பல்களுக்கு கருப்பு வர்ணம் பூசப்படுவது ஏன்?   நீர்மூழ்கி கப்பல்கள் பெரும்பாலும் கருப்பு (Black) நிறத்தில் நிறத்தில்தான் இருக்கும். நீர்மூழ்கி கப்பல்களின் உடற்பகுதி சாம்பல் நிறத்திலும், அடுக்குகள் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டன. ஆனால் 1930களில் ஒரு பிரச்னை தெரியவந்தது. இந்த வகையில் வர்ணம் பூசப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், நீருக்கு அடியில் ஆழமாக செல்லாவிட்டால், மேலே பறக்கும் விமானங்கள் மூலமாக எளிதில் கண்டுபிடிக்கப்படும் என்பதுதான். மீண்டும் பல்வேறு சோதனைகளை அமெரிக்கா நடத்தியது. இறுதியில் அடர் நீல நிறம்தான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு பாதுகாப்பானது என முடிவு செய்யப்பட்டது.  ஆனால் இந்த அடர் நீல நிறம் எளிதில் மங்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக நீரில் மூழ்கி இருக்கும்போது, நீர்மூழ்கி கப்பல்களை எதிரிகள் எளிதில் கண்டறியும் சூழல் உருவானது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து இறுதியாக தான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஏற்ற நிறமாக கருப்பு முடிவு செய்யப்பட்டது. இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக கருப்பு நிறத்தின் உருமறைப்பு திறன். எதிரிகளின் கண்களுக்கு கருப்பு நிறம் எளிதில் சிக்காது. கருப்பு நிறம் நீடித்து உழைக்கும் என்பது இரண்டாவது காரணம்.
.ஓராண்டில் மிக வேகமாக வளரும் தீவு எது தெரியுமா?  உலகில் உள்ள கண்டத்திட்டுகள், தீவுகள் பூமியின் மாற்றத்தால் நகர்வதும், ஈர்க்கப்படுவதுமான செயல்கள் நடைபெறுகின்றன. அதே போல ஒரு சில தீவுகள் மிகவும் மேகமாக வளர்வதும், கடலில் மூழ்குவதுமாகவும் காணப்படுகின்றன. உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் தீவுகளில் ஐஸ்லாண்டு முன்னிலையில் உள்ளது. இது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 செமீ வரையிலும் வளர்ந்து வருகிறதாம். அது மட்டுமின்றி இந்த தீவில் வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் அதன் தலைநகரிலேயே வசிக்கின்றனர். மேலும் இந்த தீவில் கொசுக்களே கிடையாது என்பது ஆச்சரியம் தானே.
உலகின் முதல் ஸ்டெனாகிராஃபர் யார் தெரியுமா?   சர் ஐசக் பிட்மன் என்னும் ஆங்கில எழுத்தாளர் 1837ஆம் ஆண்டில் தற்போது பழக்கத்தில் உள்ள ஸ்டெனோகிராபி எனப்படும் புதிய வகைச் சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் கோடுகள் போடப்பட்ட தாள்களில் மட்டுமே எழுதப்பட்டன.
ஜான் ராபர்ட் கிரெக் என்பவர் 1888ஆம் ஆண்டு இந்த முறையை மேம்படுத்தினார். முதலில் இச்சுருக்கெழுத்து முறை ஆங்கில மொழிக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது; காலப் போக்கில் இம்முறை பிற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற கிரேக்க தத்துவ அறிஞர்களின் “Tenets and Lectures” என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன் முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய சுருக்கெழுத்து முறை 19ஆம் நூற்றாண்டில்தான்  வளர்ச்சியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
.ஒட்டகம் தன் உடலுக்குள் நீரை சேமிப்பது உண்மையா..?  ஒட்டகங்களை பற்றிய கட்டுக்கதைகளில் ஒன்று, அது கிடைக்கும் போது நீரை பருகிவிட்டு, உடலின் ஒரு பகுதியில் சேமித்து வைத்துக் கொள்கிறது என்பதுதான் அது. ஆனால் அறிவியல் பூர்வமான உண்மை அதுவல்ல. அது நீண்ட காலம் நீரை குடிக்காமல் கொளுத்தும் பாலைவனத்தில் சமாளிப்பதற்கு காரணம் அதன் ரத்ததில் உள்ள ஓவல் வடிவ ரத்த அணுக்கள் தான். மேலும் இவை 240 சதவீதம் வரை விரிவடையும் தன்மை கொண்டவையும் கூட. மற்ற உயிரினங்களுக்கு 150 சதவீதம் வரை மட்டுமே விரிவடையும். மேலும் இவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்தம் அடர்த்தியானாலும் அதில் நீந்தி சென்று ஆக்ஸிசனை ரத்த நாளங்களுக்கு கொண்டு செல்லும் திறன் பெற்றுள்ளன. எனவே ஒட்டகம் தனது எடையில் 40 சதவீதம் வரை நீரிழப்பை சமாளிக்கிறது. இது தான் ஒட்டகம் நீண்ட நாள்களுக்கு நீர் குடிக்காமல் சமாளிப்பதன் ரகசியம்.
பூமிக்கு வயது 4,5000 கோடி ஆண்டுகள்..?  சுமார் 451 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலா உருவானது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம், அப்பல்லோ 14 விண்கலம் மூலம் மனிதர்களை முதன் முறையாக சந்திரனுக்கு அனுப்பியது. சந்திரன் எப்போது உருவானது, அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன்படி, சந்திரனில் உள்ள தாதுக்கள் மற்றும் கனிமத்தை வைத்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சந்திரன் 451 ஆண்டுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பல உயிர்கள் வாழும் பூமியின் வயது 4500 கோடி ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close