fbpx
Others

திருவள்ளூர்–திருநின்றவூரில்….சிறப்பு செய்தி

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தமிழ்நாடு டயர் டியூப் பழுது பார்க்கும் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது.இதில் பொது மக்களுக்கு நீர் மோர் பந்தல். அன்னதானம் வழங்கினர் .மாநிலத் தலைவர் .இ. சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட தலைவர். பி. கே. முரளி கிருஷ்ணா மதுரை மாவட்ட தலைவர் .ஏ. எம். பாட்ஷா. ஆம்பூர் மாவட்ட தலைவர். பாலாஜி. திண்டிவனம் மாவட்ட தலைவர்.பி. ரவி உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில் மாநில பொதுச் செயலாளர் எஸ். முத்துராஜ் .மாநிலச் செயலாளர். இளையராஜா.மாநில பொருளாளர். ஜி .ராஜ்.மாநில துணைப் பொருளாளர்.எஸ். நரசிம்மன் மாநில இணைச்செயலாளர் ஜெகன் குமார் . ஆகியோருடன் பங்கேற்ற தமிழ்நாடு டயர் டியூப் பழுது பார்க்கும் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன் நிர்வாகிகள் தேர்வு. உறுப்பினர்களுக்கு காப்பீடு பதிவு. உறுப்பினர் அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டம் கௌரவத் தலைவர் எம்.ஜி.ஆர். குமரேசன் காப்பாளர் கே. டி. எஸ். முருகன்.மாவட்ட தலைவர்பி. கே. முரளி கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இருசக்கர வாகனங்களின் பஞ்சருக்கு 100 ரூபாய் முதல் டியூப்லெஸ் டயர்களுக்கு 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பது என்றும் 200 சிசிக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சருக்கு 250 ரூபாயும் டியூப்லெஸ் டயர் பஞ்சர்க்கு 350 ரூபாயும் வசூலிப்பது என்றும் இரு சக்கர வாகனங்களுக்கு காற்று நிரப்ப 20 ரூபாயும் ஆட்டோவுக்கு காற்று நிரப்ப 30 ரூபாயும் வேன் மற்றும் கார்களுக்கு காற்று நிரப்ப 50 ரூபாயும் மினி லாரிக்கு காற்று நிரப்ப 70 ரூபாயும் பத்து வீல் லாரிகளுக்கு 110 ரூபாயும் 12 வீல் லாரிகளுக்கு 130 ரூபாயும் 14 வீல் லாரிகளுக்கு 150 ரூபாயும் காற்று நிரப்ப வாங்க வேண்டும் என தீர்மானம் ஏற்றப்பட்டது.மேலும் ஜேசிபி எந்திரங்களுக்கு காற்று நிரப்ப 60 ரூபாயும் கிரேன்களுக்கு மினிமம் கட்டணம் 1200 ரூபாய் முதல் நிர்ணயம் செய்யப்பட்டது மேலும் நடமாடும் பஞ்சர் வண்டி வாடகை மினிமம் 500 ரூபாய் என்றும் இரவு நேர பஞ்சர்களுக்கு இரவு கட்டணம் தனி என நிர்ணயம் செய்யப்பட்டது ஆட்டோக்களுக்கு பஞ்சர் போட 100 ரூபாயும் கார் டயர் களுக்கு பஞ்சர் போட 120 ரூபாயும் டியூப்லெஸ் டயர்களுக்கு 250 ரூபாய், மினி வேன்களுக்கு ₹250,மினி லாரி டயர்களுக்கு 150 டியூப்லெஸ் டயர்களுக்கு 600 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டாரஸ் லாரிகளுக்கு ஆறு வீல் லாரிகளுக்கு கிரீஸ் அடிக்க 200 ரூபாயும் 10 வீல் லாரிகளுக்கு 250 ரூபாய் 12 லாரிகளுக்கு 300 ரூபாய் 14 வீல் லாரிகளுக்கு 350 ரூபாயும் வாங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close