fbpx
Others

 சபரிமலை கோவிலுக்கு இதுவரை ரூ.52.55 கோடி வருவாய்….!

சபரிமலை கோவிலுக்கு இதுவரை ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மண்டல பூஜைக்காக கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் நேரடியாக வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் தினமும் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது. அதனை முன்கூட்டியே 3 மணிக்கு திறந்து தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  நடை திறக்கப்பட்ட நாள் முதல் ஆன்லைன் மூலமாகவும் உடனடி தரிசன முன்பதிவு மூலமாகவும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சபரிமலைக்கு இதுவரை ரூ.52.55 கோடி வருவாய்கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதன்படி சபரிமலையில் மண்டல,மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் பிரசாதங்களான அப்பம் மூலம் ரூ.2.58 கோடியும், அரவணை மூலம் ரூ.23.57 கோடியும், காணிக்கையாக ரூ.12.73 கோடியும் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார். முன்னதாக வருகிற 30-ந் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. உடனடி முன்பதிவையும் சேர்த்தால் நவம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

Back to top button
Close
Close