fbpx
Others

கேப்டன் விஜயகாந்தின் உடல்72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்நல்லடக்கம்.

தமிழ்நாடு அரசின் சார்பில் காவல்துறையின் அணிவகுப்புடன் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம்செய்யப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். மியாட் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல் சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும் பல்வேறு பிரபலங்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது.அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தீவுத்திடலில் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர். கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி சடங்குகள் தொடங்கியதுஇறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும்உடல்நல்லடக்கநிகழ்வில்குடும்பத்தினர், உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.கேப்டன் விஜய்காந்தின் இறுதி சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய LED திரை அமைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி,டி.ஆர்.பாலு,கே.என்.நேரு,தங்கம்தென்னரசு,இறுதிச்சடங்கில் பங்கேற்று மரியாதையை செலுத்தினார்கள். 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close