fbpx
Others

கர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து டெல்லியில் அமித்ஷா அவசர ஆலோசனை

அமித்ஷா

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ்136  தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான பாஜக 65 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகின்றனர் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் கர்நாடகாவில்அக்கட்சியின்தொண்டர்கள்உற்சாகமடைந்துள்ளனர்.பாஜகக்குபின்னடைவுஏற்பட்டுள்ளதால்அக்கட்சிதொண்டர்கள்கலக்கமடைந்துள்ளனர் இந்நிலையில் கர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து டெல்லியில் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே குமாரசாமி தரப்பை பாஜக அணுக முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 73.19% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்களே தேவை என்ற நிலையில், காங்கிரஸ் இறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் அடுத்த முதல்வர் சித்தாராமையாவா அல்லது சிவக்குமரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா முதல்வர் யார் என்பது நாளை (மே 14) முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close