fbpx
Others

‘இந்தியா’கூட்டணி–முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்றியது.

மும்பையில் 2-வது நாள் ஆலோசனை கூட்டத்துக்குப் பின் இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 3-வது கட்ட ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா கூட்டணியின் 2-வது நாள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொது மக்களின் பிரச்சனை, நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து விரைவில் பொதுக் கூட்டங்கள் நடத்தவும் தீர்மானம். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு உடனடியாக தொடங்கப்படும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் தொகுதிப் பங்கீடு நடத்தி முடிக்கப்படும்.  அடுத்து வரும் தேர்தல்களையும் இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத் பவார், தேஜஸ்வி யாதவ், லல்லன் சிங் ஆகிய 13 பேர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். ஹேமந்த் சோரன், கே.சி.வேணுகோபால், சஞ்சய் ராவத், அபிஷேக் பானர்ஜி, ராகவ் சத்தா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, டி.ராஜா இடம்பெற்றுள்ளனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close