உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்பு !!!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி ஏற்றார். ரஞ்சன் கோகோய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆவார். வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாவது இதுவே முதல்முறையாகும். ரஞ்சன் கோகோய் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பரில் முடிகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஓய்வு பெற்றார்.
அசாம் மாநிலம் திப்ரூகரில் 1954-ம் ஆண்டு நவம்பர் 18-ல் ரஞ்சன் கோகோய் பிறந்தார். அவருடைய தந்தை அசாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவர். 2001-ம் ஆண்டு கவுகாத்தியில் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2010-ம் ஆண்டு கவுகாத்தியில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ரஞ்சன் கோகாய் பணியாற்றியுள்ளார். பின்னர் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அங்கு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2012-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ரஞ்சன் கோகோய் தற்போது உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.