fbpx
Others

மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைபா.ஜ .க-தேனி

தேனி மாவட்டம் பா.ஜ .க சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம்

ஜூன். 09 தேனி பங்களா மேட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் மாவட்டத் தலைவர் பி.சி. பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து நிர்வாகிகளையும் தேனி நகர செயலளார் மதிவாணன் வரவேற்று வரவேற்புரை நிகழ்தினார். மேலும் இந்த சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். பொதுக் கூட்டத்தில்பா.ஜ .க மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன் கலந்து கொண்டு சாதனைகளை கூறி பேசினார். இக் கூட்டத்திற்கு சசி ராமன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகளை ஹெச். ராஜா பட்டியலிட்டு பேசினார்கள் இரண்டு ஆண்டு கொரோனா காலத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டதையும் கொரானாவிற்காக இலவசமாக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதையும், மேலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ. 6000 வங்கிகள் மூலம் வழங்கியதையும், மத்திய அரசு, அனைவருக்கும் குறிப்பாக விழிம்பு நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மக்களும் வங்கி கணக்கு ஆரம்பிக்கவும் , ஒவ்வொரு வீட்டிற்குக் கும் தனி கழிப்பறை கட்டி தந்து உதவியது, உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது, 108 ஆம்புலன்ஸ் சேவை உட்பட பல சாதனைகளை எடுத்து பேசினார்கள் மேலும் 2026ம் ஆண்டு தமிழகத்தை பா.ஜ.க கைப்ற்றும் எனவும் கூறினார். இக் கூட்டத்த்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்த் முன்னாள் மாவட்டத் தலைவரும் தேனி மாவட்ட பா.ஜ. க ஊராட்சி துணை பெருந் தலைவர் இராஜபாண்டியன், முன்னாள் மாவட்டத் தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் மாரிச் செல்வம் ஒ.பி.சி மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம் , கம்பம், சின்னமனூர் , தேனி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய நகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close