fbpx
Others

நள்ளிரவில் பாகிஸ்தான் TO குஜராத்வந்த மர்ம படகு

ஆயுதங்கள், ரூ.300 கோடி போதைப்பொருள்கள் - நள்ளிரவில் பாகிஸ்தானிலிருந்து குஜராத்துக்கு வந்த மர்ம படகு

  • பாகிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து அடிக்கடி படகு மற்றும் கப்பலில் போதைப்பொருள்கள் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது.ஆனால் சமீபகாலமாக அவை சற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனாலும் குஜராத் கடற்பகுதி தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் பாகிஸ்தானிலிருந்து படகில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கடலோர பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே கடலோர பாதுகாப்பு படையினரும், குஜராத் தீவிரவாத தடுப்புபடையினரும் சேர்ந்து குஜராத்தின் ஓகா பகுதி கடற்கரையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். குஜராத் மற்றும் இந்தியாவின் சர்வதேச எல்லைப்பகுதியில் போர்க்கப்பல் ஒன்றின் துணையோடு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்தது.அந்த படகை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த படகு நிற்காமல் சென்றது. இதனால் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்து படகை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். அல் சொஹாலி என்ற பாகிஸ்தான் மீன்பிடி படகை மடக்கி சோதனை செய்த போது அதில் பாகிஸ்தானை சேர்ந்த 10 பேர் இருந்தனர். அதோடு ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தது. அதோடு ரூ.300 கோடி மதிப்புள்ள 40 கிலோ போதைப்பொருளும் படகில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கராச்சியிலிருந்து வந்திருக்கவேண்டும் என்று கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.குஜராத் கடலோர பாதுகாப்பு படையினர் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினருடன் சேர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து வந்த 7 படகுகளை பிடித்துள்ளனர். இதில் 1,930 கோடி ரூபாய் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு 44 பாகிஸ்தானியர்கள், 7 ஈரானியர்களும் கைது செய்யப்பட்டனர். மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய பிறகு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்பகுதிகள் தொடர்ந்து உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close