fbpx
Others

ஜெய்ராம் ரமேஷ்-ராகுல் காந்தியின் நடைப்பயணம் வெற்றி பெறாமல் இருக்கசதி.

 அசாமில் ஆளும் பாஜக அரசு ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ வெற்றி பெறாமல் இருக்க முயற்சிக்கிறது என காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த 14-ம் தேதி மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. தற்போது அசாமில் யாத்திரை நடந்து வருகிறது. இந்நிலையில் அசாமில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்; அசாமில் 7 நாட்கள் தங்குவோம். அசாமில் ஆளும் பாஜக அரசு ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ வெற்றி பெறாமல் இருக்க முயற்சிக்கிறது; அதற்கு பல தடைகள் ஆளும் பாஜக அரசு செய்தது. ஆனால், அசாமின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்கள்இ பெண்கள் மற்றும் மக்கள் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை செய்தியைக் கேட்டு ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; அரசியல்சாசனத்துக்கு விரோதமாக மாநிலங்களுக்கான நிதியை குறைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடியின் அரசியல்சாசன விரோத செயலை நிதிஆயோக் சி.இ.ஒ. ஆ வெளிப்படுத்தியுள்ளார். 14-வது நிதிக்குழுவை மிரட்டி, மாநிலங்களுக்கான நிதியை பிரதமர் மோடி தடுக்க முயன்றது அரசியல்சாசனத்துக்கு முரணானது. ஒன்றிய வரியில் 42% பங்கை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க 14-வது நிதிக்குழு பரிந்துரை செய்தது. ஆனால், பிரதமர் மோடியோ 14-வது நிதிக்குழு பரிந்துரை செய்த நிதியில் பெருமளவு குறைக்க விரும்பியுள்ளார். நிதி குறைப்பு முயற்சியில் தோல்வியுற்ற மோடி அரசு, 48 மணி நேரத்தில் முழுபட்ஜெட்டையும் மறுசீரமைத்துள்ளது. ஒவ்வொரு அடுக்குகளிலும் உண்மையை மறைக்க முயன்றது மோடி அரசின் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close