fbpx
Others

பூண்டி வெள்ளிங்கிரி மலைசெய்தி

  1. வெள்ளிங்கிரி மலையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள்..!!

பூண்டியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில் நெகிழி கழிவுகள் அதிகமாக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தன்னார்வலர்கள் அதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.350க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கடந்த இரண்டு நாட்களாக இரவும் பகலும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். முதல் மலையை முற்றிலுமாக சுத்தம் செய்த தன்னார்வலர்கள், ஏழாவது மலை வரையிலும் சென்று தங்களால் முடிந்த பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து வந்தனர். இரண்டு டிராக்டர் அளவு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.தமிழ்நாடு வனத்துறை (கோவை வனக்கோட்டம்) அனுமதியுடன் வன அலுவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் உதவியுடன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, தென் கயிலாய பக்தி பேரவை, சிறுவாணி விழுதுகள், ஹிந்துஸ்தான் கல்வி குழுமம் NSS & NCC, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் மற்றும் தமிழ் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, மற்றும் பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி– ஆகிய அமைப்பின் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். மேலும் JCB இயந்திரம் மூலம் குப்பைகள் அகற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஒருங்கிணைப்பு:கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு  உணவு உதவி : தி சென்னை சில்க்ஸ் குழுமம்,தங்கும் வசதி : இந்து சமய அறநிலையத்துறை,JCB இயந்திரம் : சிறுவாணி விழுதுகள்,

அழைக்க:
8015714790
kovai.kpa@gmail.com
www.kovaikulangal.org

Related Articles

Back to top button
Close
Close