fbpx
Others

அரசு தேர்வுகள் இயக்கம் சென்னை- 6 செய்தி

அரசு தேர்வுகள் இயக்கம் சென்னை- 6.   தமிழ்மொழிஇலக்கியத்திறனறிவுத்தேர்வு-அக்டோபர் – 2022.

பள்ளி மாணவ மாணவியர்களின் அறிவியல் கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதை போன்று தமிழ் மொழி இலக்கியத் திறமை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022- 2023-  கல்வியாண்டுமுதல்தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம் ரூபாய் 1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் இத்தேர்வில் 50 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50% விழுக்காட்டிற்கு அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிறதனியார்பள்ளிமாணவர்களும்தேர்வுசெய்யப்படுவார்கள்.தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில்கொள் குறிவகையில் தேர்வு நடத்தப்படும்.அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களிலும் தேர்வு நடத்தப்படும்.

2022 – 2023-ஆம் கல்வியாண்டு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும்(CBSE/ICSE)உட்படபதினொன்றாம்வகுப்புமாணவர்கள்
01.10.2022 (சனிக்கிழமை)அன்று நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

தேர்வுக்கு மாணவர்கள் தங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் எனவே மாணவர்கள் இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.inஇன்று இணையதளம் மூலம் 22.08.2022 முதல் 9.09.2022 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகை ரூபாய் 50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்
09.09.2022

இயக்குனர்

Related Articles

Back to top button
Close
Close