fbpx
Others

கொரோனா வைரஸ் எவ்வாறெல்லாம் பரவும் – தெரிந்து கொள்வோம்

உலகையே அச்சுறுத்தி வருகின்ற இந்த கொரோனாவைரஸ் பற்றி பல நாடுகளும் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் சில முக்கிய முடிவுகளைப்பற்றி பார்க்கப்போகிறோம்.

* கொரோனா வைரஸ் பாதித்து இறந்தவரின் பிணத்தில் இருந்து இந்த வைரஸ் பரவுமா ? இல்லையா ?

கொரோனா வைரஸ் பாதித்தவரின் பிணத்திலிருந்து இந்த வைரஸ் பரவும் என்பதை தாய்லாந்தின் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இவ்வாறு தாய்லாந்தின் சுகாதார பணியாளர் ஒருவரை இந்த தொற்று தாக்கி அந்த நபர் இறந்திருக்கிறார். ஒரு பிணத்திலிருந்து ஒரு மனிதனுக்கு பரவிய வைரசால் அவர் இறந்திருக்கிறார் என்பதை தாய்லாந்து அரசு உறுதி செய்துள்ளது.

இதன் பின் ஒரு ஆய்வும் செய்யப்பட்டது அது என்னவென்றால் கொரோனாதாக்கி இறந்தவரின் உடலை கண்காணிக்கும் பணியாளருக்கு அவரது இறுதி சடங்கில் பங்கேற்கும் நபர்களுக்கும் இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இறந்தவரின் உடலில் இது எத்தனை காலம் இருக்கும் என்பதும் இதுவரை தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பிணத்தின் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால் அதிக பிணங்களை சேர்த்து கொத்தாக புதைக்கும் சம்பவங்களும் பல நாடுகளில் நடைபெற்றுக்கொண்டுள்ளது.

* அடுத்து வெப்பமான சூழலில் கொரோனா வைரஸ் தாக்கு பிடிக்குமா ? பிடிக்காதா ?

இந்த ஆய்வை france AIX MARSEILLE UNIVERSITY செய்திருக்கிறார்கள்;

இந்த ஆய்வில் என்ன செய்திருக்கிறார்கள் என்றால் இந்த கொரோன வைரஸை 60 டிகிரிக்கு மேல் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக சூடு செய்திருக்கிறார்கள். பின்னர் அதன் முடிவை பார்க்கும் போதுதான் அவர்களே அதிர்ச்சி அடைந்தார்கள் ஏனென்றால் இந்த கொரோன வைரஸ் சாகவே இல்லை அதற்க்கு மாறா அது பல நகல்களை எடுத்து கொள்கின்றது. இதன் மூலமா என்னா தெரியுதுன்னா வெப்பம் அதிகமா உள்ள இடத்திலும் இந்த கொரோன வைரஸ் பரவும் என்பது நல்லா தெரியுது. சிலர் வெப்பம் அதிகமாக உள்ள நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவாது என்ற கணிப்பில் இருந்தனர் அது தவறு என்பது இதிலிருந்து நன்றாகவே தெரியவந்துள்ளது.இவ்வாறு சூட்டினால் கூட கொரோனா வைரஸை கொள்ளவோ அல்லது செயலிழக்கவோ முடியாது என்பது இந்த ஆய்வின் மூலமா நல்லாவே தெரியுது.

* அடுத்த ஆய்வு AC மூலமா கொரோனா வைரஸ் பரவுமா இல்லையா ?

இதை செய்தது சீன ஆய்வாளர் ஒருவர்

AC மூலம் ட்ராப்லெட் ட்ரான்ஸ்மிஷனின் மூலமாகவும் இந்த கொரோன வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கு. கொரோனா பாதித்தவரின் நீர்த்துளிகள் AC மூலமாகவும் நம்மீது அடைந்து கொரோனா பரவலை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கு. அதாவது கொரோனா வைரஸ் பாதித்தவர் இருந்து அவரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் நாம் இந்த AC-யை பயன்படுத்துவதன் மூலம் நம்மை அந்த அடையும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கு ஏனென்றால் நாம் கதவுகள் அனைத்தையும் மூடி AC காற்றை மட்டும் சுவாசிப்பதால் அது நம்மை அடையும் வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் நாம் ஜன்னல்களை திறந்து தூங்கினால் அத்தகைய கிருமியான காற்று வெளியேறி , தூய்மைமிகுந்த காற்று நம்மை அடையும் அதுதான் மிகவும் நல்லது.

* சமூக இடைவெளி தேவையா ? தேவையில்லையா ?

கொரோனா வைரஸானது ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு தொடுதல், தும்பல், இருமல் என பல முறைகளின் மூலமும் பரவும் என்பதால் ,இந்த கொரோனா தொற்றின் பரவலை சமூக இடைவெளியின் மூலமாகத்தான் கட்டுப்படுத்தமுடியும் அதற்க்கு ஊரடங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் மூலமாக இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தமுடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இந்த கொரோனா வைரஸ் தொற்றானது பல ரூபத்தில் பரவுவதாக தெரியவந்துள்ளது. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சமூகஇடைவெளியை கடைபிடித்து, ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close