fbpx
Others

தேனி மாவட்டம்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா…?

 ..நாட்டின் நான்காம் தூணாக விளங்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு தேனி மாவட்டத்தில் பாதுகாப்பாற்ற நிலை :செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரது லோகோவை பறித்துச் சென்ற சமூக விரோதிகள். … பத்திரிக்கையாளர்களிடமிருந்து செய்தி உபகரணங்களை பறித்துச் சென்ற சமூக விரோதிகள் மற்றும் குண்டர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை அனைத்து தலைமை பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம் தேனி மாவட்டம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றது. மாவட்டத்தில் சமீப காலமாக கொலைகள் மற்றும் கொள்ளைகள் அதிக அளவில் அறங்கேரி வருவது வேதனை அளிக்கின்றது.மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது அமைதியான மாவட்டமாக இருந்து வந்த தேனி மாவட்டம் தற்போது சமூக விரோதிகளால் கொலை நகரமாக மாறி வருகின்றது .பெரும்பாலான கொலைகள் மது, கஞ்சா போன்ற போதை வஸ்துகளாலும், இவற்றை அதிகளவில் விற்பனை செய்வோர்கள், மற்றும் பயன்படுத்துவோர்களாலும் குறிப்பாக மது பார் நடத்துபவர்களால் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரியகுளம் பகுதிகளில் பார் நடத்தியும், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவும், காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது அதன் தொடர்ச்சியாக கஞ்சா போதையின் காரணமாக பெரியகுளம் வடகரை பகுதியில் கொலை சம்பவம் அறங்கேரியுள்ளதுஇதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன .தேனி பூதிப்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கூடத்தில் பார் எடுத்து நடத்துவோர் அங்கு கள்ள சந்தையில் மது விற்பனை செய்து வருவது சம்பந்தமாகவும், அப்பகுதி மக்கள் அந்த மது கடையை அப்புறப்படுத்த கோரி முற்றுகையிட்டதன் விளைவாகவும், இவற்றின் எதிரொலியாக செய்தி சேகரிக்க சென்ற சத்தியம் டிவி செய்தியாளர் செய்தி லோகோவை வைத்து பொதுமக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த போது, பார் நடத்தி வரும் நபர்கள் லோகோவை பறித்துச் சென்றுள்ளனர். இவை பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயலாகும். நாட்டின் நான்காம் தூணாக விளங்கக் கூடிய பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லா நிலை தேனி மாவட்ட நிர்வாகத்தில் அரங்கேறி வருவது வேதனைக்குரிய செயலாகும். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களது நலன் கருதி,பத்திரிக்கை சுதந்திரத்தை காக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வழங்கி வரும் வேளையில் தேனியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த தேனி -அல்லிநகரம் நகராட்சி மூன்றாவது வார்டு கவுன்சிலர் மற்றும் அவருடன் வந்த குண்டர்கள் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையில்பத்திரிக்கைசுதந்திரத்தைநசுக்கும்வகையில்செய்தியாளரதுலோகோவைபறித்துசென்றுள்ளனர்.பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுக்கும் வகையில் செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் போது லோகாவை பறித்து சென்று கொலை மிரட்டல் விடுத்தவரும், ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் மற்றும் அவருடன் இருந்த குண்டர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு பத்திரிகையாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு சத்தியம் டிவி தேனி மாவட்ட செய்தியாளரது லோகோ, இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம், மற்றும் இதர ஆவணங்கள் ஆகியவற்றையும் சமூக விரோதிகளிடம் இருந்து உடனடியாக மீட்டு தர வேண்டும் எனவும் , தேனி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் சுதந்திரம் மற்றும் பணி பாதுகாப்பினை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும், தேனி மாவட்டத்தில் பத்திரிகையாளரது லோகோவை பறித்து சென்ற சம்பவத்திற்கு புகார் அளித்து பல மணி நேரமாகியும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை அனைத்து தலைமை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.   இவண்  அனைத்து தலைமை பத்திரிக்கையாளர்கள் சங்கம்.தேனி மாவட்டம்.

Related Articles

Back to top button
Close
Close