fbpx
Others

07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை “இ-பாஸ் அவசியம்”மாவட்ட ஆட்சித் தலைவர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும்
வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி,07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும்.சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல்திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்;கு வருகை தரும் வெளி மாநிலம் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து  வாகனங்களும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்;.திண்டுக்கல்  மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும் என மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை புரிவதை முன்னிட்டு, இ-பாஸ்(ePass) முறையை அமல்படுத்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் TNEGA-வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.இந்த மென்பொருளை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள், வணிகம், வியாபார வேலையாக வருபவர்களும் இ-பாஸ் பதிவு செய்து கொடைக்கானலில் பயணம் மேற்கொள்ளலாம். இ-பாஸ் தேவைப்படுபவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தால், ஆட்டோ ஜெனரேட் மூலம் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கியூ ஆர் கோட் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close