fbpx
Others

ஸ்பெயினில் இருந்து முதலமைச்சர்- தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன்ஆலோசனை.

தொகுதி நிர்வாகிகளின் கருத்து, தேர்தல் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை அமைத்து உள்ளார்.அதன்படி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் ஸ்பெயினில் இருந்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.தொகுதி நிர்வாகிகளின் கருத்து, தேர்தல் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close