fbpx
Others

வழக்கறிஞரை தாக்கியது தொடர்பானவழக்கில் டிஜிபிமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

. நெல்லை மாவட்டம் மரன்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜரத்தினம் தாக்கல் செய்திருந்த மனுவில் மனிதஉரிமை தொடர்பான வழக்குகள் கூடங்களும் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் என பல வழக்குகளை முடக்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நள்ளிரவில் வீட்டிற்கு வந்த போலீசார் தன்னை அடித்து இழுத்து சென்றதாகவும், காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணபடுத்தி கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார், டிஎஸ்பி குமார், பணகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் ஆகியோர் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது வழக்கறிஞர் ராஜரத்தினம் இறந்துவிட்டதால், இந்த வழக்கை அவரது மனைவி சரோஜா நடத்தி வந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறினார்  மனுதாரர் தரப்பில் கைது நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறும் போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு தொடரப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை, எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் வழக்கறிஞரை அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அதிகாரத்தின் படி டிஜிபி நெல்லை மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய அருண் சக்திகுமார் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகவும், வழக்கிற்கு பதிலளிக்க டிஜிபி உள்ளிட்டோருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடுவதாக கூறி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close