fbpx
Others

 உக்ரைன் ரஷியா தாக்குதல்உலக நாடுகள் கண்டனம்

ரஷிய படைகளால் தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை - வெளியான புகைப்படங்கள்
 உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் ’அண்டனோவ் 225 மிரியா’ கடந்த 28-ம் தேதி ரஷிய படைகளின் தாக்குதலில் தகர்க்கப்பட்டது. 6 எஞ்சின்கள், 314 டன் எடைகொண்ட இந்த சரக்கு விமானம் கொரோனா பரவல் காலத்தில் உலகம் முழுவதும் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல பெருதவி செய்தது.
அந்த சரக்கு விமானம் ரஷிய தாக்குதலில் தற்போது பெருமளவு தகர்க்கப்பட்டுள்ளது. விமானத்தை சீரமைக்க 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு செலவு ஏற்படலாம் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close