fbpx
Others

ராஜ் தாக்கரே பா.ஜனதாவின் குரலாக ஒலிக்கிறார் –சரத்பவார்

தானேயில் நட ந்த நவநிர்மாண் சேனா பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கடுமையாக விமர்சித்தார். 
மேலும் வரும் 3-ந் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் நிவநிர்மாண் சேனா எதிர் நடவடிக்கையில் ஈடுபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சரத்பவாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை நீக்குவது குறித்து மாநில அரசு தீவிரமாக சிந்திக்கும்.
பா.ஜனதா கட்சி ராஜ்தாக்கரேவுக்கு என்ன வழிகாட்டியது என்பதை நாங்கள் அவரது உரையின் மூலம் கேட்டோம். பா.ஜனதா அவருக்கு வழக்கிய பொறுப்பை அவர் மேற்கொள்கிறார்.
மகாராஷ்டிராவில் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது மற்றும் வகுப்புவாத சித்தாந்தம் ஊக்குவிக்கப்படுகிறது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு யாரும் இரையாக வேண்டாம் என்று நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன்
நான் ஒரு நாத்திகர் என ராஜ் தாக்கரே கூறியுள்ளார். நான் கோவிலுக்கு செல்வேன் அதை யாருக்கும் படம் பிடித்து காட்டுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
கடவுள் மற்றும் மதங்களின் பெயரால் ஆதாயம் தேட முயற்சிப்பதை எதிர்த்தவர் ராஜ் தாக்கரேவின் தாத்தா பிரபோதங்கர் தாக்கரே அவர் எனது கொள்கையில் அடங்குவார்.
நாங்கள் பிரபோதங்கரின் எழுத்துகளை படிக்கிறோம். ஆனால் அவரது குடும்பத்தினர் சிலர் இதை படிக்காமல் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close