fbpx
Others

உக்ரைனின் நிரந்தர பிரதிநிதி செர்ஜிகிஸ்லிட்சியா – பேசினார்.

ரஷியாவின் தாக்குதலை கண்டித்து

,உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைன் சார்பில் ஐ.நா.வுக்கான உக்ரைனின் நிரந்தர பிரதிநிதி செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷியாவின் தாக்குதலை கண்டித்து பேசினார்.
அவர் பேசியதாவது, “உக்ரைனில் ரஷிய துருப்புக்கள் தொடர்ந்து போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்கின்றன.
80 ஆண்டுகளுக்கு முன்னர் நாசி படைகள் செயல்பட்டதை போல ரஷியா செயல்படுகிறது.பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது, நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்

Related Articles

Back to top button
Close
Close