fbpx
Others

மதுரையில் போதை மாத்திரை விற்பனைபுகார்…..

மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலியாக மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், சிறார்கள் அதிகளவு போதை மாத்திரைகள், போதை டானிக்குகளை பயன்படுத்தி வருவதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலகு சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், சிறார்கள் போதைக்கு அடிமையாவதை கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், மதுரை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் – 1940 மற்றும் விதிகள்-1945 அட்டவணைகள் “X” and ‘H’, ‘H1’Drugs” குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிசிடிவி பொருத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது சிசிடிவி பொருத்தாத மதுரை கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close