fbpx
Others

தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாளர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்….

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி சார்பில் வார்டு எண் – 05 வீர காமாட்சி ஆசாரியார் தெருவில் வழங்க வேண்டிய வாக்காளர் அடையாள அட்டைகள் பொறுப்பற்ற முறையில் ஒரு தெருவோரக் காய்கறி விற்கும் பெண்ணிடம் மொத்தமாகக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் அந்த நபர்  அந்தக் காய்கறி விற்கும் பெண் உரியவருக்கு தொலைபேசி மூலமாக .. உங்க ஓட்டு ஐடி இங்க வந்து வாங்கிக்கங்க, இல்லன்னா நகராட்சியில குடுத்துருவேன் நீங்க அங்கபோயி வாங்கிக்கங்க…… அப்படியென்று சொல்கிறார்.நீங்க யார்னு நான் கேட்டதற்கு நகராட்சியில் பணிபுரிவதாகச் சொல்கிறார்.அந்தப் பெண் ஒரு அரசியல் கட்சி சார்பாளராக இருந்தால் நம்முடைய வாக்காளர் அட்டை ஒருவேளை நமக்குக் கிடைக்காமல் போகலாம்.என்ன அவலம் இது?  வீடுதேடிச் சென்று விநியோகிக்கவேண்டிய வாக்காளர் அடையாள அட்டைகளை உரிய நபர்களை இனம் கண்டு வழங்காமல் ஒரே இடத்தில் கொடுக்கும் பணியா B.L.O க்கான பணி….யார் இவருக்கு இந்த உரிமையை வழங்கியது……… இவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம், தேனி மாவட்ட நிர்வாகமும் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாளர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்….. இல்லையெனில் இது போன்ற தவறுகள் நீண்டு கொண்டே போகும், உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா???…………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close