fbpx
Others

ஆளுநர் ஆர். என் ரவி / திமுகவின் இமேஜ்

2 TIMEஅனுப்பினால்ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்

 நீட் தேர்வு விலக்கை எப்படியாவது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக டெல்லியில் காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் ஆளுநரும் தனது தரப்பில் முக்கியமான பிளான் ஒன்றில் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி இருந்தார். ஆளுநர் திருப்பி அனுப்பிய இந்த மசோதாவை.TN HELETH MINISTER சுப்பிரமணியன் மீண்டும் அவையில் தாக்கல் செய்து நிறைவேற்றினார்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு திமுக அரசு அனுப்பியிருக்கும் நிலையில், இந்த முறை கவர்னர் கால தாமதம் செய்யமாட்டார் ; குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஆளும் கட்சி தலைமைக்கு இருக்கிறது.

நீட் விவாதம்: கல்வி உரிமையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்: வேல்முருகன் எம்.எல்.ஏ.நீட் விவாதம்: கல்வி உரிமையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்: வேல்முருகன் எம்.எல்.ஏ.

நீட் விலக்கு மசோதா

நீட் விலக்கு மசோதா

, நீட் விலக்கு விசயத்தில் திமுகவின் எதிர்பார்ப்பு இப்போதைக்கு நிறைவேறப் போவதில்லை என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் செக் வைக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினால் அதே மசோதாவை பேரவையில் நிறைவேற்றி இரண்டாவது முறையாக அனுப்பினால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்றே சட்டம் சொல்கிறது.

ஆளுநர் பிளான்

ஆளுநர் பிளான்

இதில் ஆளுநர் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் எதுவும் சட்டத்தில் சொல்லப்படாததால் அதை வைத்தே மசோதாவை கிடப்பில் போட்டு விடுகிறார்கள் கவர்னர்கள். இந்த விவகாரத்தில், மத்திய அரசு அறிவுறுத்தினால் மசோதாவை குடியரசு தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைப்பார். சர்ச்சைகளிலிருந்து கவர்னரை விடுவிக்கும் வகையில், இந்த அறிவுறுத்தல்களை கவர்னர் ரவிக்கு டெல்லியில் இருந்து உத்தரவு வரலாம்.

ஜனாதிபதி என்ன செய்வார்?

ஜனாதிபதி என்ன செய்வார்?

அப்படி ஒரு உத்தரவு வந்து மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் போது இந்த சட்ட மசோதாவை ஜனாதிபதி கிடப்பில் போட்டு விட முடியும். அதாவது இங்கே கிரீன் லைட் கிடைத்தாலும் மேலே ரெட் லைட் போடப்பட வாய்ப்பு உள்ளது. அதனால், கவர்னரிடமிருக்கும் இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கச் சொல்லி விட்டு, ஜனாதிபதி மூலமாக அந்த மசோதாவை கிடப்பில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் பாஜக தரப்பில் உலாவிக் கொண்டிருக்கிறது.

திமுகவின் இமேஜ்

திமுகவின் இமேஜ்

ஆனால் இன்னொரு பக்கம் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் டெல்லியில் சில முயற்சிகளை திமுக தரப்பு எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. நீட் விலக்கு விவகாரம் திமுகவின் இமேஜ் சம்மந்தப்பட்டதால் குறிப்பாக முதல்வர் ஸ்டாலினின் இமேஜ் சம்மந்தப்பட்டதாகவும் உள்ளது. அதாவது சொல்வதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம் என்கிற திமுகவின் முழக்கத்தின் மீதான இமேஜ் சம்மந்தப்பட்டதாகவும் உள்ளது.

டெல்லி திமுக

Related Articles

Back to top button
Close
Close