fbpx
Others

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கட்டணம் குறைப்பு

 கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள்போக்குவரத்துநெரிச

லைகுறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில், 88.52ஏக்கரில்,சிஎம்டிஏசார்பில்,ரூ.393கோடியே74லட்சத்தில்  கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக கழிவறைகள் உள்ளன.பிரத்யேக டிக்கெட் கவுன்டர்கள், சக்கர நாற்காலி வசதிகள், தொட்டுணரக்கூடிய தரை தளம், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கானதனிகழிவறைகள்  உள்ளன. தென் மாவட்டங்களுக்குஇயக்கப்படும் SETC பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும். தென் மாவட்டங்களுக்கான SETC, TNSTC, PRTC மற்றும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் கோயம்பேடு வரை இயக்கப்படாது ; இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்துக்கு ஒரு மாநகரப் பேருந்து இயக்கப்படும். 6 அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக செல்லும். TNSTC, PRTC பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம்குறைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பயண தூரம் குறைவதால் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ரூ.460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.430 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close