fbpx
Others

திரெளபதி முர்மு–பழங்குடியினத்தில் பிறப்பதும், பெண்ணாய் பிறப்பதும் பாதகம் கிடையாது

ஜார்கண்ட்: பழங்குடியினத்தில் பிறப்பது பாதகம் கிடையாது என குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சார்பில் ஜார்கண்டில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்; பழங்குடியினத்தில் பிறப்பதும் அல்லது பெண்ணாய் பிறப்பதும் பாதகமான விஷயம் கிடையாது. பழங்குடி சமூகம் பல துறைகளில் சிறந்த முன் மாதிரிகளாக திகழ்கிறது. பழங்குடி சமூகத்தில் வரதட்சணை முறை கிடையாது. தங்களின் திறமை, ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.நம் நாட்டில் பெண்களின் பங்களிப்புக்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளது. சமூக சீர்திருத்தம், அரசியல், பொருளாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, வணிகம், விளையாட்டு மற்றும் ராணுவப் படைகள் மற்றும் பல துறைகளில் பெண்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஜார்கண்டின் கிராமப்புற பொருளாதாரத்திற்கு பெண்களின் பங்கு அவசியம். பெண்களின் உரிமைகள், நலனுக்காக அரசு நடத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close