fbpx
Others

நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கும் அதிமுக..!

மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்தப் புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர எம்பிக்களுக்கான கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.   இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி இதனை திறந்துவைக்க உள்ளதாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் அறிவித்தது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் இவ்விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close