fbpx
Others

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…..

  தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,  *உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். *நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை செயலாளராகக் கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  *கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக மங்கத்ராம் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். *பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். *மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷ்ணு மகாராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். *தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக இயக்குனராக அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். Also Read – அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்து தமிழக அரசு அரசாணை * நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகம் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆனையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். * கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். *நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநராக இருந்த பிரபாகர், தமிழக சாலைப்பணி திட்ட இயக்குநராக நியமனம். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநராக பிரபாகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் பிரபாகர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. *மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை திட்ட செயல்படுத்தப்படவுள்ள நிலையில், அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Related Articles

Back to top button
Close
Close