fbpx
Others

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு….

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. கட்சிகளுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கு பிரிக்கப்பட்டு வருகின்றன.அதேநேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக மத்தியில் ஆளும் பாஜக, கடந்த மார்ச் 2-ஆம் தேதி 195 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டதுஇந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 39 இடங்களில் போட்டியிட உள்ள தங்களுடைய வேட்பாளர் பட்டியலை தற்பொழுது அறிவித்துள்ளதுகாங்கிரஸ்.இதில்அக்கட்சித்தலைவர்ராகுல்காந்திவயநாட்டில்போட்டியிடஉள்ளநிலையில்,சசிதரூர்திருவனந்தபுரத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆறு இடங்களுக்கும், கர்நாடகாவில் ஏழு இடங்களுக்கும், கேரளாவில் 16 இடங்களுக்கும், மேகாலயாவில் இரண்டு இடங்களுக்கும், தெலுங்கானாவில் நான்கு இடங்களுக்கும், லட்சதீவு, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் தலா ஒரு இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் தற்பொழுது வெளியாகிஉள்ளது. வேணுகோபால் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடியாத நிலையில் விரைவில் தமிழகத்திற்கான பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கேரளாவில் இருந்து பெரும்பாலான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர், அங்கு காங்கிரஸ் மீதமுள்ள நான்கு இடங்களை அதன் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close