fbpx
Others

கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் உயிரிழந்த 2 பேருக்கு நிவாரண உதவி

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது வைகை ஆற்றின் கரை அருகே திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 5க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்களில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மற்ற நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இதில், உயிரிழந்த 2 பேருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருநது உடனடியாக தலா ரூ.5 லட்சம் வழங்கும்படி அவர் உத்தரவிட்டு உள்ளார்.  படுகாயமடைந்த ஒருவருக்கு ரூ.2 லட்சமும் மற்றும் லேசான காயம் அடைந்த 7 பேருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்

Related Articles

Back to top button
Close
Close